Bust of Marcus Aurelius

ஸ்டோயிசம்: இது நீங்கள் சிந்திக்கும் விதத்தை மாற்றும்

கொரொனா கால முடக்கத்தை எவ்வாறு கையாளலாம் என்று சிந்தித்த வேளையில், ரோமானிய மாமன்னன் மார்கஸ் அருலியஸ்,  ஐரோப்பாவை பிளேக் எனும் தொற்று நோய் வருத்திய கொடிய தருணத்தில் எழுதிய ‘மெடிடேசன்’ என்ற நூலில் கொரொனா கால முடக்கத்தை கையாள மனரீதியான அறிவுரைகள் இருந்தது வியப்புக்குரியது. 

மார்கஸ் அருலியஸ் பின்பற்றிய ஸ்டோயிஸிசம் என்ற சித்தாந்தம், சூழ்நிலைகளை மாறுபட்ட கோணத்தில் பார்ப்பது நம்மை பரவசபடுத்துவது மட்டுமன்றி இக்கால சூழ்நிலைக்கும் பொருந்தி போவது சிந்தனைக்குரியது. நம்முடைய சிந்திக்கும்  முறையினை கட்டமைத்த தத்துவக்கோட்பாடுகளும் கருத்துருக்களும் நம்மை சமுதாயமாக உருவாக்கியுள்ளது. ஒரு தனி மனிதன் வெளிப்படுத்த விரும்பும் தன்னுடைய தனித்துவமான அடையாளத்திற்கும், அம்மனிதன் சமுதாயத்தோடு  இணையும் போது நிகழும் இயக்கத்திற்கும் உள்ள முறனில் தத்துவத்திற்கான வினாக்கள் விரிகின்றன. 

ஸ்டோயிக் என்றழைக்கப்படும் ஸ்டோயிஸிசம் பின்பற்றுபவர், வெளிப்புற நிகழ்வுகள் தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஒப்புக்கொண்டு, அதனை அணுகும் முறையில் மாற்றத்தை கொண்டு வர முயல்வார்கள். இதை அன்றாட வாழ்க்கை நிகழ்வுடன் பொருத்திப் பார்க்கலாம். நம்முடைய கட்டுப்பாட்டில் வெளிப்புற நிகழ்வுகள் இருக்க வேண்டும் என நாம் விரும்பியதால், கடந்த காலத்தில் மோசமான  நிகழ்வுகளை சந்தித்திருப்போம். நாம் சோகமாகவோ, மன உளைச்சலுக்கோ உள்ளான தருணங்களை  நினைவு கூர்ந்தால், அவை நம்முடைய எதிர்வினைகள் வெளிப்புற நிகழ்வுகளை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிவிடும் என நாம் கருதியதால் நிகழ்ந்திருக்கும். இன்று வாழும் ஒரு ஸ்டோயிக் இந்த கொரொனா தொற்றை பேராபத்தாக உணர்ந்தாலும், அதை அறிவுபூர்வமாக சமாளிக்க தெரிந்திருப்பார்.

வெளிப்புற நிகழ்வுகள் தன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை என எண்ணும் ஸ்டோயிக்கு, உணர்ச்சிகளோ, மற்றவர்களின் உணர்வுகளை புரிதலோ இருக்காது என குழம்பிவிட கூடாது. அனத்து விவகாரங்களிலிருந்து ஈடுபாடின்றி இருப்பது நம்முடைய எதிர்வினை ஆற்றலை மட்டுப்படுத்தி மனதை அமைதியுறச் செய்யும். ஒரு அநீதி இழைக்கப்பட்டால், அதற்கெதிராக உடனடியாக நம்முடைய குரலை ஓங்கி உரைக்க வேண்டும் என நினைப்போம் அல்லவா? ஆனால் ஒரு ஸ்டோக் அத்தகைய தருணங்களில், உண்ர்ச்சிவசப்படாமல், தன்னுடைய அறிவுபூர்வமான கருத்துக்களை உரிய இடத்தில், உரிய முறையில் எடுத்து வைப்பார். அவர்கள் உணர்ச்சியற்றவர்கள் அல்லர், மாறாக உணர்ச்சிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்.

தருக்கரீதியான அறிவு, நன்னெறி, மற்றும் இயற்கையின் இயக்கம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, ஸ்டோயிஸிசத்தின் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒரு ஸ்டோயிக்கு தருணத்தின் தன்மையை மதிப்பீடு செய்ய பெருமளவு தருக்கத்தையும் குறைந்தளவு கருத்தியலையும் பயன்படுத்தி அத்தருணத்தை சிறப்பாக கையாள்வார். ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருப்பதே வெற்றியின் அடையாளம்தான். பல்வேறு பிரிவுகளாய் பிரிந்து கிடக்கும் நம் சமுதாயத்தில் வேரூன்றியுள்ள பேராசை, தீராத பொருளீட்டும் தாகம், வெறுப்புணர்ச்சி, மற்றும் வகுப்புவாத சிந்தனைகளினால் ஏற்படும் தீய விளைவுகளை மட்டுபடுத்த நம் சமுதாயம் சுயபரிசோதனை செய்ய கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதற்கான வழியை ஸ்டோயிஸிசம் காட்டியுள்ளது.

நன்னெறி தத்துவங்களின் நோக்கம், தகமை பண்புகளை தொடர்ந்து பேணுவதனால், இன்புற்று வாழ வேண்டும் என்பதே. தகமை பண்புகளை பேணுவதெனில் விடியலில் எழுந்து உடற்பயிற்சி செய்வதும், மத நம்பிக்கையின்படியான செயல்களை செய்வதும், நல்ல உணவுகளை உண்பது மட்டும்தானா? இவையெல்லாம் அவசியம்தான், ஆனால் ஒவ்வொருவருக்கும் தேவைகளும் விருப்பங்களும் வேறுபடலாம். எனவே, மனம் அமைதி பெறுவது மட்டுமே நம் நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு முதல் படி, இயற்கையின் இயக்கத்தையும்., சுற்றியுள்ள மனிதர்களின் நடத்தைகளையும் மாற்ற இயலாது என்பதை ஏற்க மனதுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இந்நிலையில், ஒரு தனி மனிதனால் நடப்பவைகளை மாற்றிவிட இயலாது ஆகவே, நன்னெறிக்குட்பட்டு அவனுடய முடிவுகளும், எதிர் வினைகளும் தருக்கரீதியாக இருக்க வேண்டுவதுடன் அவைகள் உகந்தவைதான் என பௌதீக இருப்பின் மூலம் உறுதி படுத்தப்பட வேண்டும் என்கிற தருக்கரீதியான கருத்து உருவாவதை உணர முடியும்.

மனிதன் இதுவரை கண்டுள்ள  அண்ட வெளியை அளவை நோக்குங்கால், மிகமிக சிறிய அளவிலான மனிதனால், எல்லையற்ற பெருவாழ்விற்கான நோக்கத்தை எளிதாக புரட்டி விட முடியும் என ஏற்றுக்கொண்டு இருப்பது விந்தைக்குரியது அல்லவா?

நாம் எரிச்சல் அடையும்விதமாக நம் மீது ஒருவர் காட்டிய,  கோபதாபங்களுக்கு காரணம் வேரொருவர் அவரிடம் காட்டிய,  கோபதாபங்கள் அதற்கு காரணம் அவருக்கு, வேரொருவர், அவருக்கு, அவருக்கு என  இது தொடரும் என கண்டிருக்கிறோம். எனவே, நம்மை அறியாமல், நாம் மற்றவர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்த கூடாது என நினைத்தால் சிறந்த வழி மற்றவர்கள் நம் மீது காட்டும் கோபதாபங்களுக்கு சலனமின்றி இருப்பது மட்டுமே. மேலும் இவ்வுலகம் நமக்கு மட்டும் உரியது இல்லை, நம்மை சாராமல் இயற்கை இருக்கிறது மற்றைய உயிரிகள் இருக்கின்றன; ஆனால் நாம் இவற்றை சார்ந்து இருக்கிறோம் என்கிற உண்மையை உணர வேண்டும். நாம், தனி மனிதராக, எதிர் வினையாற்ற, அறிவுபூர்வமாக சிந்தித்து முடிவெடுக்கும் முறையை கையாண்டால், அது பெரும் மாற்றத்திற்கு வழிகோலும் என்பது ஒரு நுட்பமான நிகழ்வாகும். தனி மனிதனுக்கும், சமுதாயத்துக்குமான உறவை அழகாக விவரித்துள்ளனர்  ஸ்டோயிக்குகள்.

நாம் மாறுபட்ட தேடல்களுக்கு பெருவிருப்பம் கொண்டுள்ளோம். அன்றாட செயல்களை, நாம் செயல்படுத்தும் முறைகள் மற்றவர்களை கையாளும் போது நல்ல மாற்றங்களைத் தரும் என்பதுதான் ஸ்டோயிஸிசயத்தின் சாராம்சம். சிந்தனைக்கான பள்ளிகள், எதிர்கால சந்ததிகளுக்கும் ஏற்ற  சாத்தியமான நடைமுறைகளை கற்றுக் கொடுப்பது, தனி மனிதனுக்கு அப்பள்ளிகள் ஊட்டும் ஞானத்தை விட சிறப்பானது. ஆதாரங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட மன நல மருத்துவ முறையான  அறிதிறனுக்கான, நடத்தை மாற்றுதல் மருத்துவ முறை, ஸ்டோயிஸிசயத்தின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டுள்ளது.

Manjari Balu
Economics enthusiast and a coffee lover aspiring to build a network of like minded thinkers across the world.